states

img

மேற்குவங்கத்தில் பாஜக வளர மம்தா பானர்ஜிதான் காரணம்.... காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றச்சாட்டு...

கொல்கத்தா:
மேற்குவங்கத்தில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகளை வலுவிழக்கச் செய்வதற்கு மம்தா எடுத்த முயற்சிகளே, இன்று அம்மாநிலத்தில் பாஜக வளர்ந்ததற்கு காரணம் என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக சவுத்ரி மேலும் கூறியிருப்பதாவது:

“2011-ஆம் ஆண்டில் காங்கிரஸ் உதவியுடன்தான் மம்தா பானர்ஜி ஆட்சிக்கு வந்தார். ஆனால் அதிகாரத்திற்கு வந்தபின்னர் காங்கிரஸ் கட்சியை உடைத்து அதனை நசுக்க வேண்டும் என மம்தா எண்ணினார்.தற்போது மாநிலத்தில் பாஜக வளர்ந்து வருகிறது. இதைத் தடுக்க வேண்டும் என்று எங்களிடம் மம்தா பானர்ஜிஆதரவு கோருகிறார். காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற மதச்சார்பற்ற கட்சிகளை மம்தா பானர்ஜி வலுவிழக்கச் செய்ததன் பலனாகவேஇன்று பாஜக மேற்கு வங்கத்தில்ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது. அவருக்கு பாஜக-வை ஆட் சிக்கு வராமல் தடுப்பதுதான் நோக்கம் என்றால், மம்தா பானர்ஜி இன்றே காங்கிரசில் இணையலாம். எங்கள் துணையில்லாமல் பாஜக ஆட்சிக்கு வருவதை அவரால் தடுக்க முடியாது.இவ்வாறு ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளார்.

;